திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2020 (18:01 IST)

51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று உள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்தது. வார்னர் 83 ரன்களும், பின்ச் 60 ரன்களும், ஸ்மித் 104 ரன்களும், லபிசாஞ்சே 70 ரன்களும், மாக்ஸ்வெல் 63 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 390 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தததால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விராத் கோஹ்லி 89 ரன்களும், கே.எல்.ராகுல் 76 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களும், தவான் 30 ரன்களும் எடுத்தனர். இன்றைய ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 3ஆம் ஒருநாள் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறும்