ஸ்மித்துக்கு மீண்டும் ஆஸி அணியின் கேப்டன் பதவி? வாரியம் பதில்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை மீண்டும் ஸ்மித்திடம் கொடுப்பது குறித்து கிரிக்கெட் வாரிய சேர்மன் பதிலளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு மூன்று வடிவங்களிலும் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்தியதால் அவருக்கும் துணைக் கேப்டன் வார்னருக்கும் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை முடிந்து மீண்டும் அணிக்குள் திரும்பிய ஸ்மித் தனது பழைய பார்மை மீட்டெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். மற்ற லிமிடெட் வகை போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறார்.
இதனால் மீண்டும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை சில முன்னாள் வீரர்களும் ஆதரித்துள்ளனர். இதுபற்றி ஆஸி கிரிக்கெட் போர்டின் சேர்மன் எர்ல் எட்டிங்ஸ் எங்களிடம் இப்போது மூன்று சிறந்த கேப்டன்கள் உள்ளனர். அதனால் கேப்டன் பதவியின் சாய்ஸில் ஸ்மித் இல்லை. ஸ்மித்துடன் மட்டுமே கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும். அவர் அணிக்குள் வந்த போது இளம் வீரராகவும் கேப்டனாகவும் இருந்தார். பரிந்துரை இல்லாமலேயே அவரைக் கேப்டனாக்கினோம். நாங்கள் அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.