செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (10:18 IST)

முகமது ஷமிக்கு பதில் அணியில் சேர்க்கப்பட உள்ளாரா நடராஜன்!

இந்திய அணியில் காயம்பட்ட முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு  இடையிலான டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டரை நாட்களிலேயே பரிதாபமாக போட்டியை தோற்றது. அடுத்த மூன்று போட்டிகளுக்கும் கேப்டன் கோலி இடம்பெற மாட்டார். தனது மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்புகிறார்.

இந்நிலையில் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்யும் போது தலையில் அடிபட்டதால் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் செய்த போது அவருக்கு ஏற்பட்ட காயம் பலமாக இருப்பதால் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவருக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.