உங்கள் இடத்துக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது… தவானுக்கு லட்சுமனன் அறிவுரை!

mahendran| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:16 IST)

இந்திய அணியில் தவானின் இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது என லட்சுமனன் அறிவுரைக் கூறியுள்ளார்.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நீண்ட காலமாக டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணியில் தவான் ஓரம்கட்டப்பட்டுள்ளார். இதுபற்றி பேசியுள்ள லட்சுமனன் ‘உங்கள் இடத்தில் விளையாட பிருத்வி ஷா, கே எல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் என கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி டி 20 அணியில் இடம்பிடியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :