வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (10:53 IST)

இலங்கை உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் ஆடும் நிலையில் உள்ளது… ரணதுங்காவுக்கு வர்ணனையாளர் பதில்!

அர்ஜுனா ரணதுங்காவின் கருத்துக்கு இந்திய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார்.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் உலகக்கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா ‘இரண்டாம் தர அணியை அனுப்பி, நம்மை அவமானப்படுத்தியுள்ளனர். தொலைக்காட்சி வருவாய்க்காக இதை ஒத்துக்கொண்ட நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே இதற்காக நாம் கண்டிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

ரணதுங்காவின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள இந்திய வரணனையாளர் ஆகாஷ் சோப்ரா ‘இந்திய அணி பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமல்தான் வந்துள்ளது. இப்போதுள்ள இலங்கை அணியின் ஃபார்ம் குறித்து கூற வேண்டும் என்றால் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடும் நிலையில்தான் உள்ளது. அதனால் அவர்கள் கொஞ்சம் தங்களை சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். இப்போதுள்ள நிலையில் தடுமாற்றம் அடைந்த அணியாக இலங்கை இருப்பதே நிதர்சனம்.’ எனக் கூறியுள்ளார்.