வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2025 (09:58 IST)

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

MS Dhoni

ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, ரஜினிகாந்த் பட வசனத்தை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான எம்.எஸ்.தோனிக்கு தமிழ்நாட்டில் பெரும் ரசிக பட்டாளமே உள்ளது. தற்போது அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ரசிகர்களுக்காக தொடர்ந்து ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் மற்றும் எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அங்கு ஏதாவது தமிழ் பட வசனம் பேச சொல்லி கேட்டபோது சஞ்சு சாம்சன் “எனக்கு ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும்.. நான் ஒரு தடவெ சொன்னா நூறு தடவெ சொன்னா மாதிரி” என்று பேசிக் காட்டினார்..

 

அதை தொடர்ந்து தோனியையும் ஏதாவது ஒரு வசனம் பேச சொன்னபோது அவர் படையப்பாவில் வரும் “என் வழி தனி வழி” என்ற டயலாக்கை பேசினார். உடனே அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Edit by Prasanth.K