வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (07:31 IST)

சச்சின் சாதனையை நெருங்கிய விராத் மற்றும் ரோஹித்!

நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி போட்டியையும் தொடரையும் இந்திய அணி வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த வகையில் சச்சின் சாதனையை சமன்படுத்த விராத்கோஹ்லி மிஸ் செய்துளார்.\
 
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களில் சச்சின் மட்டுமே இதுவரை 9 சதங்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தலா 8 சதங்களை அடித்து சச்சின் சாதனையை நெருங்கி உள்ளனர். நேற்றைய போட்டியில் 89 ரன்கள் அடித்த விராத் கோஹ்லி சதமடித்திருந்தால் சச்சின் சாதனையை சமன் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் சச்சின் 15 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பதும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தலா எட்டு அரை சதங்கள் மட்டுமே அடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சதம் சாதனையை விரைவில் விராத்கோஹ்லி, ரோஹித் சர்மா முறியடிப்பார்கள் என்றாலும் சச்சினின் அரைசத சாதனை முறியடிக்கப்பட இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது