தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!
- மும்பையை வென்று முதல் இடத்துக்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ்… இரண்டாம் இடம் யாருக்கு?
- ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!
- RCB & SRH ஆகிய இரு அணிக் கேப்டன்களுக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
- ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!
ஜிதேஷ் ஷர்மா அதிரடி… இமாலய ஸ்கோரை சேஸ் செய்து இரண்டாம் இடத்துக்கு சென்ற ஆர் சி பி!
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி ப்ளே ஆஃப் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத்தின் மூலம் 227 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களோடு 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ஆடிய ஆர் சி பி அணியும் தொடர்ந்து அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆன பின்னர், ஆர் சி பி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அதன் பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் ஷர்மா கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினர்.
ஆர் சி பி அணியைத் தற்காலிகமாக வழிநடத்திய ஜிதேஷ் ஷர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றி நோக்கி அணியை வழிநடத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பெங்களூர் அணி. நாளை நடக்கும் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.