1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:23 IST)

5 விக்கெட்…4 பேருக்கு தெறித்த ஸ்டம்புகள்… இந்திய அணிக்கு தயாரான உம்ரான் மாலிக்!

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மாலிக் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார். நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதிலும் 4 விக்கெட்கள் க்ளீன் பவுல்ட்டாக அமைந்தன. சன் ரைசர்ஸ் சார்பாக மற்ற எந்த ஒரு வீரரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதிவேகம் மற்றும் விக்கெட் எடுக்கும் திறன் ஆகியவற்றால் உம்ரான் மாலிக் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக இப்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.