ரூ.20,532 கோடி கூடுதல் செலவு: ஒலிம்பிக் ஸ்பான்சர்கள் நிலை என்ன??
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடத்த ரூ.20,532 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஒலிம்பிக் ஒத்திவைப்பால் அதன் ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள் என எல்லா தரப்பினருக்கும் மிகப்பெரிய பொருளாதார இழப்பு எற்பாடும் என கூறப்படுகிறது.
ஜப்பான் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ரூ.92 லட்சம் கோடி செலவாகும் என குறிப்பிட்டது. ஆனால் இப்போது ஒரு ஆண்டுக்கு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடத்த ரூ.20,532 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.