வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (22:48 IST)

காஞ்சி வீரன் அணிக்கு மேலும் ஒரு வெற்றி! தூத்துகுடியை வென்றது

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று காஞ்சி வீரன் அணியுடன் தூத்துகுடி அணி மோதியது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபாராஜித் 76 ரன்களும், சித்தார்த் 50 ரன்களும், சதீஷ் 47 ரன்களும் எடுத்தனர். 
 
இதனையடுத்து 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தூத்துகுடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்ததால் காஞ்சி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தூத்துகுடி அணியின் ஸ்ரீனிவாசன் 22 ரன்களும், 
நாதன் 19 ரன்களும், கணேசமூர்த்தி 17 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் காஞ்சி வீரன்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தோல்வி அடைந்த தூத்துகுடி அணி 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 8 புள்ளிகளுடன் திண்டுக்கல் அணி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது