புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (05:54 IST)

முதல் இரவு-பகல் டெஸ்ட் போட்டி: டிக்கெட் விற்பனையில் சாதனை என தகவல்

இந்தியா விளையாடும் முதல் இரவு-பகல் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் மோதும் இந்த போட்டிக்கு டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது
 
நேற்று டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில் முதல் நான்கு நாட்கள் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் 67 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு திறன் உள்ளது. இந்த மைதானத்தில் இரவு-பகல் டெஸ்ட் போட்டி முதல்முறையாக நடப்பதால் அந்த அனுபவத்தை நேரில் காணவேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி வருவதாக கூறப்படுகிறது 
 
எனவே நவம்பர் 22 முதல் 25 வரையிலான நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாகவும், ஐந்தாம் நாளுக்குரிய டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் இரவு-பகல் டெஸ்ட் போட்டியை காண தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது