திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:26 IST)

3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பந்துவீச்சு!

3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் சாம்பியன் தொடர்,  சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் விளையாட்டு தளத்தில் நடைபெற்றது. 
 
இதன் இறுதிப் போட்டி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி டென்பின் பவுலிங் விளையாட்டு தளத்தில் நடைபெற்றது.
 
இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் நடந்த இறுதிப் போட்டியில், கணேஷ் - தீபக் இடையிலான போட்டி பரபரப்பான முறையில் நடைபெற்றது. 
 
முதல் ஆட்டத்திற்குப் பிறகு 2 பின்களின் மெல்லிய விளிம்பில், 2 வது போட்டியில் கணேஷ் 6 புள்ளிகள் மூலம் தீபக்கை வீழ்த்தினார்.
 
இறுதியில் தீபக் 4 பின்கள் என்ற குறுகிய புள்ளிகள் (420-416) வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
 
முன்னதாக முதல் அரையிறுதியில் இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. இதில், முதல் நிலை வீரரான தீபாக் கோத்தாரி இரண்டு போட்டிகளில் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பெய்க்கை  (405-372) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 
 
33 பின்களின் பின்ஃபால் வித்தியாசத்தில் நாக் அவுட் முறையில் இரண்டாவது அரையிறுதியில், இரண்டாம் நிலை வீரரான கணேஷ். என்.டி, மூன்றாம் நிலை வீரரான பார்த்திபன்.ஜெ அவர்களை 441-416) 25 பின்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிகான தனது இடத்தை உறுதி செய்தார்.