1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (08:55 IST)

சென்னையில் நேற்று விபத்துக்களே இல்லை: '0' விபத்துக்கள் விழிப்புணர்வு எதிரொலி...!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஜீரோ விபத்துக்கள் என்ற விழிப்புணர்வை போக்குவரத்து காவல்துறை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சென்னையில் ஒரு விபத்து கூட பதிவாகவில்லை என்றும் விபத்துக்களே இல்லாத நாளாக சென்னை நேற்று இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஜீரோ விபத்துக்கள் என்ற விழிப்புணர்வு சென்னை முழுவதும் ஏற்படுத்தப்பட்டது என்பதும் சென்னையின் முக்கிய பகுதிகளில் பிரமாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் போக்குவரத்துக் காவல் துறை ஏற்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 20 நாட்கள் நடந்த ஜீரோ விபத்துக்கள் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று சென்னையில் அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஒரு விபத்து கூட பதிவாகவில்லை என சென்னை போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இது போன்ற விழிப்புணர்வை சென்னையின் பல இடங்களில் நடத்த வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது. நேற்று போலவே தினந்தோறும் விபத்துக்கள் இல்லாத சென்னை நகரமாக மாற்ற வேண்டும் என்பதை எங்கள் குறிக்கோள் என்று சென்னை பெருநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva