1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (07:49 IST)

நேற்றைய போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி.. 8 தோல்விகளுடன் 11வது இடம்..!

புரோ கபடி தொடரில் நேற்று தமிழ் தலைவாஸ் அணி புனே அணியுடன் மோதிய நிலையில் நேற்றைய போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் மொத்தமுள்ள 12 அணிகளில் 11 வது இடத்தில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில், மும்பையில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில், புனேரி பால்டன் அணி 29-26 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


 இந்த தோல்வி காரணமாக தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பதும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 11 வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 12வது இடத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி உள்ளது.
 
புனே, குஜராத், ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது

Edited by Siva