திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:51 IST)

அவரை எடுக்காமல் விளையாடுகிறீர்களா? உங்களுக்கு தோல்வி தேவைதான் – கொதித்த ரசிகர்கள்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் கேன் வில்லியம்சனை எடுக்காதது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் தொடங்கி 4 போட்டிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. அந்த அணியின் ஆடும் லெவனில் நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை எடுக்காததே தோல்விக்குக் காரணம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொதித்தெழ ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் ‘கேன் வில்லியம்சன் மேட்ச் பிட்னஸ் பெற இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் விரைவில் அவர் ஆடும் லெவனில் இறங்குவார்’ எனக் கூறி சமாதானம் தெரிவித்துள்ளார்.