செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:22 IST)

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வார்னர்!

வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னர் சக ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர்களோடு நடனமாடியுள்ளார்.

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இணையத்தில் பயங்கரமாக ஹிட் ஆனது. இதையடுத்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர். அதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் அடக்கம்.

இதையடுத்து இப்போது டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களோடு அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட அது வைரலாகியுள்ளது. வார்னர் ஏற்கனவே பல தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு இதுபோல நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.