வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (13:09 IST)

அண்ணாமலை ரஜினியாக மாறிய டேவிட் வார்னர் - வைரல் வீடியோ

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அண்ணாமலை ரஜினி கெட்டப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். ஆனால் டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகும் ரசிகர்களுக்கு அதன் மீதான மோகம் இன்னும் குறையவில்லை. 
 
அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  புட்ட பொம்மா , இஞ்சி இடுப்பழகி, பாகுபலி பிரபாஸ் போன்ற கெட்டப்களில் வீடியோ வெளியிட்டு வியப்பளித்தார். 
 
இந்நிலையில் தற்போது அண்ணாமலை ரஜினி போன்று உடை அணிந்து அந்த படத்தின்  காட்சி போன்றே நடித்துள்ள Funny வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கும் எக்க சக்க லைக்குகள் குவிந்து சிரிப்பூட்டி வருகிறது.