செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (17:37 IST)

உலகக்கோப்பை போட்டியில் இருந்து திடீரென இலங்கை கேப்டன்.. என்ன காரணம்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் அணியில் இருந்து விலகி உள்ளார்.

உலகக் கோப்பை போட்டி தொடரில் இதுவரை இலங்கை விளையாடிய முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில் காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

இந்த நிலையில், இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Edited by Siva