2வது டி20 போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சொந்த நாட்டில் தொடரை இழந்த இலங்கை!
2வது டி20 போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சொந்த நாட்டில் தொடரை இழந்த இலங்கை!
தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்து சொந்த நாட்டிலேயே தொடரை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று கொழும்புவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணியின் கிட்டத்தட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் பேட்டிங்கில் சொதப்பியதை அடுத்து 18. 1 ஓவரில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி 104 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்தது
குவின்டன் டி காக் மிக அபாரமாக விளையாடி 58 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் டாப்ரைஸ் ஷாம்சி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது