பென் ஸ்டோக்ஸ் & சிராஜ் உரசல் –சமரசம் செய்த கோலி!
நான்காம் டெஸ்ட்டின் முதல் நாளில் சிராஜ் மற்றும் பென் ஸ்டோக்ஸுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
நான்காவது டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து 9 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இந்நிலையில் சிராஜ் வீசிய ஒரே ஓவரில் அவர் 3 பவுண்டரிகளை விரட்ட சிராஜுக்கும் அவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதையடுத்து கோலியும் நடுவரும் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தனர்.