1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (09:40 IST)

4வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!

4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

 
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. 
 
அந்த போட்டி இரண்டே நாட்களில் முடிந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மைதானத்தின் மீதும் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மைதானம் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் நடக்க உள்ளது.  இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
 
இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக டான் லாரண்ஸும், ஸ்டுவர்ட் பிராடுக்கு பதிலாக டோம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.