1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (10:27 IST)

முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து… கணக்கைத் தொடங்கிய அக்ஸர் படேல்!

அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடக்கும் நான்காவது போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.  அந்த பிட்ச் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இங்கிலாந்து அணி போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே முதல் விக்கெட்டை இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அக்ஸர படேல் இங்கிலாந்தின் டாமினிக் சிப்ளியை அவுட்டாக்கி தனது கணக்கை தொடங்கியுள்ளார்.