புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:22 IST)

ஃபார்முக்கு வருவதற்கு ஒரு பந்து போதும்…. தொடர்நாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிரான டி 20 தொடரில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் அதன் பிறகு அணிக்கு திரும்பினாலும் பழைய பார்முக்கு வர முடியாமல் தடுமாறினார். ஆனால் அவருக்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி 20 தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்நாயகன் விருதைப் பெற்ற பின்பு பேசிய அவர் ‘மூன்று அரைசதங்களும் எனக்கு சிறப்பானவை. நீங்கள் பார்முக்கு வரவேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு பந்தே போதுமானது. பந்தை கவனமாகப் பார்த்து அதன் தரத்துக்கு ஏற்ப விளையாடினேன். காயத்துக்கு பின் மீண்டு வந்திருக்கும் இந்த பயணம் கண்டிப்பாக ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம். உண்மையான சோதனைக் காலம் என்றால் அது காயத்தில் இருந்து மீளும் காலம்தான்’ எனக் கூறியுள்ளார்.