செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:47 IST)

மு க ஸ்டாலினின் உங்களில் ஒருவன் இன்று வெளியீடு!… சென்னை வரும் ராகுல் காந்தி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் சுயசரிதையான உங்களில் ஒருவன் முதல் பாகம் இன்று வெளியாக உள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு கொரோனா மூன்றாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இப்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் நேற்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கிறது. விழாவைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் ‘இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நான் ஒரு ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளேன். நான் எழுதியிருக்கும் உங்களில் ஒருவன் என்ற புத்தகம் விரைவில் இந்த புத்தகக் கண்காட்சியிலேயே வெளியாக உள்ளது. என்னுடைய 23 ஆண்டுகால பயணத்தை அதில் பதிவு செய்து இருக்கிறேன். என்னுடைய பள்ளி, கல்லூரி, இளமைக்காலம், கட்சி அரசியலில் நுழைவு, நான் முதலில் நடத்திய கூட்டம் என அதில் பதிவு செய்துள்ளேன். 1976 ஆம் ஆண்டுவரையிலான வாழ்க்கையை அதில் முதல் பாகமாக பதிவு செய்துள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.

அந்த அறிவிப்பின் படி இன்று மாலை 3 மணிக்கு புத்தகக் கண்காட்சியில் உங்களில் ஒருவன் முதல் பாகம் வெளியாகிறது. இதனைக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார்.