செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (09:55 IST)

மனைவியை பிரிந்தார் ஷிகார் தவான்… 8 ஆண்டு மணவாழ்க்கைக்குப் பிறகு பிரிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை பிரிந்துள்ளார்.

35 வயதாகும் ஷிகார் தவான் ஆயிஷா முகர்ஜியை 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். தவானை திருமணம் செய்யும்போது ஆயிஷா தனது முதல் திருமண உறவை முடித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு இரண்டு மகள்களும் இருந்தனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷாவை இணையதளம் மூலம் ஏற்பட்ட நட்பின் மூலமாக தவான் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இப்போது தவானை பிரிந்துவிட்டதை ஆயிஷா முகர்ஜி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆனால் தவான் இன்னும் இதுபற்றி இன்னும் அறிவிக்கவில்லை.