திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (10:11 IST)

ஆஸி முக்கிய வீரர் காயம் – உலகக்கோப்பையில் இருந்து நீக்கம் !

ஆஸியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியுடனானப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கும். அப்படி நீடிக்கும் பட்சத்தில் நான்காம் இடத்தில் நியுசிலாந்து அணியுடன் மோதும்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக பீட்ட்ர் ஹாண்ட்ஸ்கோம்ப் அணியில் இடம்பிடித்துள்ளார்.