அரையிறுதியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் உள்ளே வந்த நியூசிலாந்து

Pakistan
Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (20:06 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெற வேண்டுமானால் இன்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது மட்டுமின்றி 300 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும்.
இந்த நிலையில் இன்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ரன்கள் அடித்தது. எனவே வங்கதேச அணியை 7 ரன்களுக்குள் ஆல்-அவுட் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால் சற்றுமுன் வரை வங்கதேசம் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 44 ரன்கள் அடித்துள்ளதால் பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்தது.

இனிமேல் இந்த போட்டியில் பாகிஸ்தான் ஜெயிதாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

நாளை இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியும், ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முடிவுகள் முதல் இரண்டு இடங்களை நிர்ணயம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரும் 9ஆம் தேதி முதல் அரையிறுதியும், 11ஆம் தேதி இரண்டாம் அரையிறுதியும், 14ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :