வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (22:50 IST)

அரையிறுதி இல்லாவிட்டாலும் ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேச அணியை 300 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு தகுதி பெற முடியாவிட்டாலும் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ரன்கள் குவித்தது. இமாம் உல் ஹக் 100 ரன்களும், பாபர் அசாம் 96 ரன்களும் எடுத்தனர்.
 
இதனையடுத்து 316 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷாகிப் அல் ஹசன் 64 ரன்களும், லிட்டன் தாஸ் 32 ரன்களும், மஹ்முதுல்லா 29 ரன்களும் எடுத்தனர். 
 
இன்றைய போட்டியில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அப்ரிடி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.