சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

sachin
Last Updated: வெள்ளி, 5 ஜூலை 2019 (20:19 IST)
இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா , இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் இளம்வீரரான இக்ரம் அலி கில்,  சச்சின் டெண்டுக்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
இன்று வெஸ்ட் இணீடீஸுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்த இளம் வீரர் இக்ரம் அலி, இந்திய கிரிக்கெட் கடவுளாகப் பாராட்டபெரும் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
 
வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 300 ரன்களுக்கு மேல் அடித்தது.  பின்னர் இந்த கடினமான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது.
 
ஆனால் ஆப்கானிஸ்தான் அணில் விளையாடிய இளம் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி (18)  மிக இளம் வயதில் உலகக்கோப்பை போட்டியில் அதிக  ரன்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்து, இந்திய வீரர் சச்சினின் சாதனையை முறியடித்தார். 
 
இதுகுறித்து சச்சின் , ஆப்கானிஸ்தான் இளம் வீரர் இக்ரலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :