வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (09:08 IST)

கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சினின் நிறைவேறாத இரண்டு ஆசைகள்!

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது நிறைவேறாத ஆசைகள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் மற்றும் அதிக ரன்கள் என பல சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது என்ற அவரின் சாதனையை இனி எந்த காலத்திலும் யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைவேறாத இரண்டு ஆசைகள் பற்றி சமீபத்தில் பேசியுள்ளார்.

அதில் ‘முதலாவதாக எனது சிறுவயது ஆதர்ஸ்மான இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் கவாஸ்கருடன் இணைந்து விளையாட முடியாமல் போனது. நான் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் முன்னரே அவர் ஓய்வு பெற்று விட்டார். அதனால் அவரோடு விளையாட முடியவில்லை. அதே போல வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர் பேட்ஸ்மேன் வீவியன் ரிச்சர்ட்ஸுக்கு எதிராக விளையாட முடியாமல் போனது. நான் அறிமுகமாகி 2 ஆண்டுகள் கழித்துதான் அவர் ஓய்வுபெற்றார். ஆனாலும் அப்போது இந்தியா வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் நடக்காததால் அவரோடு விளையாட முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக கவுண்ட்டி கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக விளையாடினேன்’ எனக் கூறியுள்ளார்.