இந்திய அணியின் அடுத்த கோலி இவர்தான்…முன்னாள் வீரர் ஆருடம்

Rishab Pant
Sinoj| Last Modified வியாழன், 13 மே 2021 (21:47 IST)


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தோனிக்குப் பிறகு அணியை நல்லமுறையில் வழிநடத்திச் செல்கிறார் இதனால் இவரது தலைமையில் இந்திய அணியி சிறந்த முறையில் விளையாடி வருகிறது.

இந்நிலையில்,விராட் கோலிக்குப் பிறகு கேப்டனாகும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு இருப்பதாக முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்து தொடரின்போது காயம் அடைந்தார். அதனால் அவர் அத்தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பாண்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
ஓரிரு தோல்விகள் ஏற்பட்டாலும் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தார். இந்நிலையில், சிலமுறை அவர் சறுக்கல்களும், தவறுகள் செய்தாலும் அவரது வழக்கமாப ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரதுஃபார்முக்கு திரும்புவார். ரிஷப் பாண்ட்டிற்கு
எதிர்காலக் கேப்டனாகும் தகுதி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :