சிரஞ்சீவியை திருப்தி படுத்தாத மோகன் ராஜாவின் திரைக்கதை!
இயக்குனர் மோகன் ராஜா இப்போது தெலுங்கில் லூசிபர் படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லுனரான மோகன் ராஜா இயக்க உள்ளார். சிரஞ்சீவி தவிர்த்த மற்ற கதாபாத்திரங்களின் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் மோகன் ராஜா. இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களுக்காக பல மாற்றங்களை திரைக்கதையில் மோகன் ராஜா செய்து சிரஞ்சீவி சொல்லியுள்ளார். ஆனால் அந்த திரைக்கதையில் சிரஞ்சீவிக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படவில்லையாம். இதனால் இப்பொது மீண்டும் திரைக்கதை எழுதும் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.