புதன், 8 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified ஞாயிறு, 16 ஜூன் 2019 (17:42 IST)

அதிரடியில் மிரட்டிய ரோஹித் – தவறான ஷாட்டால் தவறவிட்ட 150 !

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 140 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம், இன்று மதியம் இந்திய நேரப்படி 3.00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

இதில் டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதுதான் வாய்ப்பு எனப் பேட் செய்தது. ரோஹித்தும் ராகுலும் சிறப்பான தொடக்கம் கொடுக்க இந்தியா அணி தற்போது 39 ஓவர்கள் முடிவில் 228 ரன்களை சேர்த்துள்ளது.

இதில் சிறப்பாக விளையாடி சதமடித்து 150 ரன்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் ரோஹித் ஷர்மா ஹசன் அலியின் ஓவரின் தேவையில்லாத ஷாட் விளையாடி அவய்ட் ஆனார். ரோஹித் 113 பந்துகளில் 140 ரன்களை சேர்த்துள்ளார்.