1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified ஞாயிறு, 16 ஜூன் 2019 (10:43 IST)

டி.ஆர்.பி.க்காக பதில் சொல்ல மாட்டேன் – விராட் கோஹ்லி சாமார்த்தியம் !

இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோஹ்லி டி ஆர் பி ரேட்டிங்குக்காக எந்த பதிலையும் தான் சொல்ல போவதில்லை எனக் கூறியுள்ளார்.

இன்று மதியம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. இந்தியாவை உலகக்கோப்பையில் தோற்றதில்லை என்ற வரலாற்றை தொடர இந்தியாவும் அதை முறியடிக்க பாகிஸ்தானும் கடுமையாகப் போராடும் முனைப்பில் உள்ளனர். ஆனால் இந்த போட்டியை முன்னிறுத்தி இரு நாட்டு ஊடகங்களும் ஏதோ மூன்றாம் உலகப்போர் மாதிரி விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கலந்துகொண்ட விராட் கோஹ்லி ‘ இந்த போட்டியோடு உலகக்கோப்பை முடிந்துவிடப் போவதில்லை.  எங்களது கவனம் முழுவதும் இதைவிடப் பெரிய விஷயத்தில் உள்ளது. 11 பேரும் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டு விளையாட இருக்கிறோம். வானிலை நம் கையில் இல்லை. எத்தனை ஓவர்கள் போட்டி நடந்தாலும் நாம் செய்ய வேண்டியதை செய்வோம்’ எனத் தெரிவித்தார்.

அப்போது நிரூபர் ஒருவர் முகமது அமீருக்கும் விராட் கோஹ்லிக்குமான எதிர்கொள்ளல் எப்படி இருக்கும் எனக் கேட்க ‘ டி ஆர் பி க்காகவோ பரபரப்பு தலைப்புகளுக்காகவோ நான் எந்த ஒரு விஷயத்தையும் கூறப்போவதில்லை. எந்த பவுலரையும் அவரது திறமைக்கு ஏற்பவே எதிர்த்து விளையாடுகிறோம். ’ என சாமர்த்தியமாக கூறினார்.