வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2019 (18:57 IST)

பின்னி பெடலெடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் - ஆஸிக்கு 353 ரன்கள் இலக்கு !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா வலுவான தொடக்கத்தை அமைத்துள்ளது.

உலகக்கோப்பைத் தொடர் கடந்த மாதம் 30 ஆம் தேதியில் இருந்து நடந்து வருகின்றன. இதுவரை 12 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதையடுத்து 13 ஆவது போட்டியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்  மோதும் போட்டி இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோஹித்தும் தவானும் நிதானமானப் போக்கைக் கடைபிடித்து விளையாட ஆரம்பித்தனர். முதல் பத்து ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடிய இருவரும் அடுத்த 10 ஓவர்களில் விறுவிறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய ரோஹித் 57 ரன்களில் கோல்டர் நைல் பந்தில் விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் கேப்டன் கோஹ்லியோடு இணைந்த தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 117 ரன்களில் அவுட் ஆக அதையடுத்து வந்த பாண்ட்யா அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். பின்னர் கேப்டன் கோஹ்லியோடு சேர்ந்து தோனி கடைசி நேரத்தில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி 14 பந்துகளில் 27 சேர்த்து அவுட் ஆனார். அதையடுத்து அதே ஓவரில் கோஹ்லியும் 82 ரன்னில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்தது. ராகுல்11  ரன்களோடும்  கேதார் ஜாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.