ரோஹித், தவான் அரைசதம் – வலுவான நிலையில் இந்தியா !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா வலுவான தொடக்கத்தை அமைத்துள்ளது.
உலகக்கோப்பைத் தொடர் கடந்த மாதம் 30 ஆம் தேதியில் இருந்து நடந்து வருகின்றன. இதுவரை 12 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதையடுத்து 13 ஆவது போட்டியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோஹித்தும் தவானும் நிதானமானப் போக்கைக் கடைபிடித்து விளையாட ஆரம்பித்தனர். முதல் பத்து ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடிய இருவரும் அடுத்த 10 ஓவர்களில் விறுவிறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய ரோஹித் 57 ரன்களில் கோல்டர் நைல் பந்தில் விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 23 ஓவர்களில் 127 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. தவான் 67 ரன்களுடனும் கோஹ்லி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் விளையாடி வருகின்றனர்.