ரிஷப் பண்ட்டும் காலி… போராடும் டெய்ல் எண்டர்ஸ்!
இந்திய அணியின் ஐந்தாம் நாள் ஆட்டம் ஆரம்பமே அதிர்ச்சியாக தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது 154 ரன்கள் முன்னிலையில் இருப்பதை எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்த நிலையில் 2வது இன்னிங்சில் 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஹானே 67 ரன்களும் புஜாரா 45 ரன்களும் எடுத்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ரிஷப் பண்ட் 22 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. தற்போது இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் விக்கெட் விழாமல் இருக்க போராடி வருகின்றனர்.