பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை வென்ற வீரருமான ரிக்கி பாண்டிங், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2025 முதல் 2028 வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிக்கி பாண்டிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 168 டெஸ்ட் போட்டிகளில் 13,378 ரன்கள், 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ரன்கள் மற்றும் 10 ஐபிஎல் போட்டிகளில் 91 ரன்கள் எடுத்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாண்டிங், பின்னர் பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்தார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த பாண்டிங், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்ந்துள்ளார். கடந்த 8 சீசன்களில் பஞ்சாப் அணியின் 6ஆவது தலைமைப் பயிற்சியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ், தங்கள் எக்ஸ் பக்கத்தில் ரிக்கி பாண்டிங்கின் "ஸ்பிரிங் பேட்" தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. 1990களில், பாண்டிங் பேட்டிங் செய்த போது, அவரது பேட்டில் ஸ்பிரிங் இருப்பதாக வதந்திகள் இந்தியாவில் பரவியது காரணமாக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran