1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Morne morker new bowling coach joined with Indian team

இந்திய அணியோடு இணைந்த புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

கம்பீர்
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகிக் கொண்டதை அடுத்து புதிய பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதில் டி 20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் ஒருநாள் தொடரை இழந்தது.

இதையடுத்து இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரான மோர்னே மோர்கல் தற்போது சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி வீரர்களோடு இணைந்துள்ளார்.

கம்பீர் பொறுப்பேற்கும்போதே பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல்தான் வேண்டும் எனக் கேட்டு அவரை ஒப்பந்தம் செய்யவைத்தார் என்று சொல்லப்பட்டது. இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய நிலையில் அந்த நட்பு மற்றும் புரிதலின் காரணமாக கம்பீர் அவரைக் கேட்டதாக சொல்லப்படுகிறது.
About Writer
vinoth