வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (18:44 IST)

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இப்போதைக்கு ஓய்வு குறித்து நான் எதுவும் யோசிக்கவில்லை என்றும் வயதாகும்போது கூடுதலாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நான் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன் என்றும் இருந்தாலும் போதும் என்ற எண்ணம் எனக்கு எப்போது வருகிறதோ அப்போது நான் ஓய்வு பெற்று விடுவேன் என்றும் தெரிவித்தார்.

எனக்கு நானே எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொள்ளவில்லை என்றும் அதன் மூலம் ஆட்டத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றை இழக்க  விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

எல்லோரும் இந்திய அணிக்கு வருகிறோம், விளையாடுகிறோம், வெளியேறுகிறோம். அந்த பணியை செய்ய மற்றொருவர் வருவார். அதுதான் இந்தியன் கிரிக்கெட் என்று அஸ்வின் கூறினார்

Edited by Siva