திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:00 IST)

ஆப்கானிஸ்தானத்தை அழிப்பதை நிறுத்துங்கள்… உலகத்தலைவர்களுக்கு ரஷீத் கான் வேண்டுகோள்!

ஆப்கன் அணியின் கேப்டன் உலகத்தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கனில் முகாமிட்டு இருந்த அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ‘உலகத் தலைவர்களே, என் நாடு குழப்பத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். சொத்துகள் சூறையாடப்பட்டு மக்கள் தங்கள் வாழிடங்களை இழந்து அல்லல் உறுகின்றனர். ஆப்கன் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களை அழிப்பதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.