3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றும் - உளவுத்துறை எச்சரிக்கை!
3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை.
அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கப்பட்ட பின்பு நடந்து வரும் சண்டையில், கிட்டதட்ட 65% நிலப்பரப்பு தலிபான் பயங்கரவாதிகள் வசம் சென்றுள்ளது. 11 முக்கிய நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருப்பதால் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.
இந்நிலை நீடித்தால் ஒரு மாதத்தில் காபூலை தவிர பிற பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.