செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (06:12 IST)

கடைசி ஓவரில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி! மும்பைக்கு மீண்டும் ஒரு தோல்வி

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. யாதவ் 72 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் எடுத்தனர்
 
168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் சாம்சன் 52 ரன்களும், ஸ்டோக்ஸ் 40 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்
 
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி புள்ளிப்பட்டியலில் 3 வெற்றி, 3 தோல்வி என 5வது இடத்தில் உள்ளது.