செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (15:28 IST)

தோனிக்குப் பின் சி எஸ் கே கேப்டன் யார்? ரெய்னாவின் சாய்ஸ் இவர்தான்!

சி எஸ் கே அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக செயல்பட ஜடேஜாவை தனது சாய்ஸாக கூறியுள்ள ரெய்னா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுகிறார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்குப் பிறகு சி எஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்பட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள சுரேஷ் ரெய்னா ‘சென்னை அணியில் ராயுடு, உத்தப்பா, ஜடஜா என சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அந்த தகுதி உள்ளது. ஆனால் ஜடேஜாவே அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது’ எனக் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தோனிக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்தத் தகுதியானவர் என சுரேஷ் ரெய்னாவின் பெயரே சொல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.