சென்னையில் உறுதியானது குவாலிஃபயர் – சி எஸ் கே ரசிகர்கள் மகிழ்ச்சி !
சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் குவாலிபையர் போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில்தான் இறுதிப் போட்டிகள் நடக்கும். அதுபோல இந்த ஆண்டு சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடக்க வேண்டும். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால் 12000 இருக்கைகள் கொண்ட 3 கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கபடுவதில்லை. அதனால் இறுதிப்போட்டிகள் அங்கு நடந்தால் பெரிய அளவில் டிக்கெட் விற்பனையில் அடிவிழும் என்பதால் போட்டியை ஹைதராபாத்துக்கு மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இதனால் சென்னை ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இதனையடுத்து லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிய்ன் ஊர்களில் குவாலிஃபையர் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சென்னை அணி நேற்றைய வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளதால் சென்னையில் போட்டிகள் நடப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.