ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மே 2024 (09:36 IST)

இலங்கையில் இருந்து அவசர அவசரமாக திரும்பிய பத்திரனா, தீக்‌ஷனா.. நாளைய போட்டியில் பங்கேற்பு..!

விசா பணிகளுக்காக சிஎஸ்கே அணி வீரர்களான பத்திரனா மற்றும் தீக்‌ஷனா இருவரும் இலங்கை சென்று இருந்த நிலையில் இன்று அவசர அவசரமாக இந்தியா திரும்புவதாகவும் நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் 50 போட்டிகளுக்கும் அதிகமாக முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் பிளே ஆப் சுற்று தொடங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எதிர்பார்த்த வெற்றிகளை பெறவில்லை என்பதும் அந்த அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று கூறப்படும் நிலையில் கடந்த போட்டியில் பத்திரனா, தீக்‌ஷனா ஆகிய இருவருமே விளையாடாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் நாளை பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட இலங்கையிலிருந்து பத்திரனா, மற்றும் தீக்‌ஷனா திரும்பி விட்டதாகவும் இருவரும் விசா குறித்த பணிகளுக்காக இலங்கை சென்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran