வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 2 மே 2024 (21:19 IST)

ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மேல்முறையீடு! டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை..!

Manish Sisodiya
புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஜாமீன் கேட்டு மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை  டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.
 
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மற்றும் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திகார் சிறையில் இருக்கிறார்.
 
இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் கடந்த மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முடித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா, ‘டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளதால் தற்போதைய சூழலில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் உட்பட எந்தவித நிவாரணங்களும் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

 
இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.