திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (17:43 IST)

145 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை: பாகிஸ்தான் அணியை சம்பவம் செய்த நியூசிலாந்து!

145 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை: பாகிஸ்தான் அணியை சம்பவம் செய்த நியூசிலாந்து!
145 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் ஸ்டாம்ப்பிங் மூலம் அவுட் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த சம்பவத்தை செய்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது
 
இதனை அடுத்து அந்த அணி அதிரடியாக களமிறங்கிய நிலையில் இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா மற்றும்ஷான் மசூத் ஆகிய இருவரும் நியூசிலாந்து விக்கெட் கீப்பரால் ஸ்டம்பிங் முறையில் அடுவ் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் கேப்டன் பாபர் அசாம் மற்றும் மிக அபாரமாக விளையாடி 149 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் அவருக்கு துணையாக சர்பாஸ் அகமது 85 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran