திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (15:11 IST)

100 ஆவது டெஸ்ட் என்ற மைல்கல்லை எட்டப் போகும் டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 100 ஆவது டெஸ்ட்டில் நாளை விளையாட உள்ளார்.

எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிகெட்டில் 100 போட்டிகள் என்பது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை வெகுசிலரே அந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்நிலையில் நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்த உள்ளார்.

இதுவரை 99 டெஸ்ட் மேட்ச்களில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த 99 போட்டிகளில் அவர் 24 சதங்கள் அடித்துள்ளார்.